Thursday, August 12, 2010

Sangeetha Megam -Tamil Lyrics From Udhaya geetham Movie. சங்கீத மேகம் பாடல் வரிகள் ‍ உதய கீதம்‍படத்தில் இருந்து...

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்..
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே ஹோ...

(சங்கீத...)

போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியில் நீ நீந்த வா‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ (2)
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (2)
கேளாய் பூ மலரே ஹோ...

(சங்கீத...)

உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பவனியில் போகின்றதே (2)
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே (2)
கேளாய் பூ மனமே

(சங்கீத....)

No comments:

Post a Comment